‘Braddell Hill’ அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள பிளாக் 10சி பிராடெல் ஹில் (Fire @ Blk 10C Braddell Hill) அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (03/12/2021) இரவு 07.30 PM மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினருக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பிஷான் தீயணைப்பு நிலையம் (Bishan Fire Station) மற்றும் பயா லெபார் (Paya Lebar Fire Station) தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் உடனடியாக, தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர்.

சிங்கப்பூர் பயணியுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணிக்க சுகாதாரத்துறை உத்தரவு!

அடுக்குமாடி குடியிருப்பில் 12- வது மாடியில் (12th floor) உள்ள ஒரு வீட்டில் தீ கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவிச் செட்டை (Wearing Breathing Apparatus Sets) அணிந்துக் கொண்டு தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு நுழைந்தனர். வீட்டில் உள்ள படுக்கையறைக்கு சென்று தீயைத் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும், அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து தீக்கரையானது.

பாதிக்கப்பட்ட மாடியில் இருந்தவர்கள் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்னதாக, தாங்களாகவே வெளியேறினர்.

இழுவைப் படகில் வரிச் செலுத்தப்படாத சிகரெட்டுகள்…சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 50 குடியிருப்பாளர்கள் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.