நொண்டிச் சாக்கு சொல்லும் கோடீஸ்வரர் – பதிலடி கொடுத்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம்!

mha-richard-branson - pc- mothership
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் குறித்து உண்மையற்ற அறிக்கைகளை பிரிட்டிஷ் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் வெளியிட்டு வருவதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் செய்தி வெளியீட்டில் கூறியது.
அமைச்சர் கே சண்முகத்துடனான நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கான அழைப்பை நிராகரித்த பிரான்சனை உள்துறை அமைச்சகம் (MHA) விமர்சித்துள்ளது.
தொலைகாட்சி விவாதம் மரண தண்டனையில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும்,சொற்பொழிவுகளை ஒலிக்கலவைகளாக மாற்றிக் குறைக்கும் என்றும் பிரான்சன் கூறினார்.அதே சமயம் தொலைகாட்சி விவாதத்தில் ஆளும் கட்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு ஒரு தொலைகாட்சி நேரடி விவாதத்திற்கான அழைப்பை மறுத்த பிரான்சன் பல்வேறு காரணங்கள் கூறுவது ‘நொண்டிச் சாக்கு’ என்று (MHA) விமர்சித்துள்ளது.

பிரான்சன் தனது கருத்துக்களை நுணுக்கமாக முன்வைக்க முடியும்.மரண தண்டனை குறித்த விவாதத்தில் அவருக்குப் பதிலாக பொது மக்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற பிரான்சனின் ஆலோசனைக்கு அமைச்சகம் பதிலளித்துள்ளது.
இது தொடர்பான விவகாரத்தில் சிங்கப்பூர் அரசாங்கம் பொதுமக்களுடன் விரிவான ஈடுபாட்டைக் கொண்டிருப்பதை கோடீஸ்வரருக்குத் தெரியாமல் இருக்கலாம் என்று கூறியது.மேலும்,2022 ஆம் ஆண்டில் மட்டும், மரண தண்டனை குறித்து ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்களுடன் அரசாங்கம் கலந்துரையாடலில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டியது.
மரணதண்டனையை அமுல்படுத்துவதை பெரும்பாலான சிங்கப்பூரர்கள் ஆதரித்தது ஆய்வில் தெரிய வந்ததாகவும் கூறியது.சிங்கப்பூர் அரசாங்கத்திடம் யார் பேசுவது என்று கூறுவது பிரான்சனின் இடம் அல்ல என்றும் MHA கூறியது.
பிரான்சன் தனது செல்வம்,புகழ் போன்றவற்றின் காரணமாக விவாதத்தில் அவரது ஆலோசனைகள் கேள்வியின்றி கேட்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார் என்றும் அமைச்சகம் கூறியது.