பயணிகளிடம் மன்னிப்பு கோரியது ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனம்- காரணம் என்ன தெரியுமா?

 

ஜூன் 16- ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் (Changi International Airport) இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777- 300ER ரக விமானம் புறப்பட்டு, இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்கு சென்றுக் கொண்டிருந்தது.

விமானம் புறப்பட்ட நான்கு மணி நேரத்தில் மோசமான வானிலை காரணமாக, விமானம் ஆட்டம் கண்டதால் விமானத்தில் இருந்த ஊழியர்களுக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட விமானி, சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். விமானத்தைத் தரையிறக்க சாங்கி விமான நிலையக் குழுமம் உடனடியாக அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, விமானத்தைப் பாதுகாப்பாக விமானி தரையிறக்கினார்.

இதைத் தொடர்ந்து, காயமடைந்த விமான ஊழியர்கள் ஐந்து பேர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மற்ற பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் லண்டனுக்கு அனுப்பும் நடவடிக்கையில் விமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் வசதி உள்ளிட்டவை விமான நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் குளுகுளு மழை – வெப்பம் தணிந்து நிலவிய குளிர்ச்சி

விமானச் சேவையில் ஏற்பட்ட தடங்கலுக்கு பயணிகளிடம் ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.