சிங்கப்பூருக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்யவிருக்கும் புருணை!

blocked from importing eggs from Malaysia after failing licensing requirement
File Photo: Eggs

மலேசியா, தாய்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், போலந்து உள்ளிட்ட 16 நாடுகள் சிங்கப்பூருக்கு தொடர்ந்து முட்டைகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, 17வது நாடாக புருணை நாட்டைச் சேர்ந்த முட்டைப் பண்ணை நிறுவனங்கள் சிங்கப்பூருக்கு முட்டை ஏற்றுமதி செய்ய சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது.

13 பீர் பாட்டில்களை வீசி எறிந்து அடாவடி – துப்புரவு ஊழியருக்கு சிறை

புருணை நாட்டின் முட்டைகளை சிங்கப்பூர் உணவுத்துறை அதிகாரிகள் பல கட்ட சோதனைகளை நடத்திய பின்பே, முட்டை ஏற்றுமதிக்கு அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, புருணை நாட்டில் செயல்பட்டு வரும் ‘கோல்டன் சிக் லிவ்ஸ்டாக் ஃபார்ம்’ என்ற முட்டைப் பண்ணையில் இருந்து சிங்கப்பூரைச் சேர்ந்த ‘டாசூன் எஹ்க்ஸ்’ என்ற உள்ளூர் நிறுவனம் இறக்குமதி செய்தது. இந்த நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில் இரண்டு முறை முட்டைகளை இறக்குமதி செய்திருக்கிறது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விரைவில் புருணை நாட்டு கோழி முட்டைகள் விற்பனைக்கு வரவுள்ளது.

S Pass அல்லது work permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: ரெடியா இருங்க!

சிங்கப்பூரில் இறக்குமதியாகும் முட்டைகளில் பெரும்பாலானவை மலேசியாவில் இருந்து வருகின்றன என்ற போதிலும், காலப்போக்கில் சிங்கப்பூருக்கு வரும் மலேசியா நாட்டு முட்டைகளின் அளவு குறைந்து வருகிறது.

கடந்த 2019- ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு இறக்குமதியான மலேசிய நாட்டின் முட்டைகளின் எண்ணிக்கை 72% ஆக இருந்த நிலையில், 2021- ஆம் ஆண்டு அதன் எண்ணிக்கை 52% ஆக குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா விசாவில் வேலைத் தேடி சென்றவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

இதனிடையே, சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புறத் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக புருணை நாட்டு சென்றுள்ளார். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள முட்டைப் பண்ணைக்கு நேரில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.