BTO வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு! – கட்டுமானப் பணிகளுக்கு ஆதரவு வழங்கிய கழகம்..

HDB Flat

சிங்கப்பூரில் சுமார் 50%க்கும் மேற்பட்ட BTO வீடுகளின் கட்டுமானப் பணிகள் Covid-19 வைரஸ் தொற்று பரவலின் காரணமாக தாமதமாக நடந்துள்ளது. தற்போது அவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருப்பதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (HDB) தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமதமாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவுப் பகுதிக்கு வந்துள்ளது. இதுவரை 52 கட்டுமானத் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. ஆகையால், அடுத்த 2 ஆண்டுகளில் BTO வீடுகள் கட்டும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும் கழகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் Northshore Edge என்ற கட்டுமானத் திட்டம் புங்கோலிலும் (Punggol) Senja Ridges, Senja Heights Sky Vista ஆகிய திட்டங்கள் புக்கிட் பாத்தோக்கிலும் (Bukit Batok) முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது தாமதமாக நடைபெறும் கட்டுமானப் பணிகளின் விவரங்களை HDB வழங்கவில்லை.

தற்போது, சிங்கப்பூரில் Covid-19  தொற்றின் நிலையும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அணியின் சூழலும் மாறியுள்ளதாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கட்டுமானத் துறைக்கு வழங்கப்படும் வலுவான ஆதரவும் BTO வீடுகளைக் குறித்த நேரத்தில் முடிக்க உதவுவதாகக் கழகம் தெரிவித்துள்ளது.