பட்ஜெட் 2021: S Pass வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடு குறைக்கப்படும்…

(Photo: Today)

உற்பத்தித் துறையில் S Pass வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடு அடுத்த 2 ஆண்டுகளில் 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் செவ்வாய்க்கிழமை (பிப்.16) தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

பட்ஜெட் 2021: விமானத்துறைக்கு S$870 மில்லியன் நிதி உதவி

சேவைகள், கட்டுமானம், கப்பல் துறை போன்ற பிற துறைகளில் ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகள் போலவே உற்பத்தித் துறையிலும் அவை மேற்கொள்ளப்படுகின்றன.

S Pass ஊழியர்கள், மாதத்திற்கு குறைந்தபட்சம் S$2,500 சம்பாதிக்கும் நடுத்தர திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள்.

உற்பத்தித் துறையில் இரண்டு கட்டங்களாக அது மேற்கொள்ளப்படும்.

முதலாவது, 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 20 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும்.

அதனை அடுத்து, இரண்டாம் கட்டமாக 2023ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 15 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு ஹெங் கூறுகையில், உற்பத்தித்துறை என்பது பொருளாதாரத்தின் தூணாகும், இது சுமார் 450,000 ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தியுள்ளது அல்லது ஊழியரணியில் இது 12 சதவீதம், என்றார்.

உற்பத்தித்துறையில் வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் போக்கு குறைய வேண்டும்; உள்ளூர் துறைக்குத் தேவையான ஆழமான திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றார் திரு ஹெங்.

இந்த துறையில் உள்ளூர் ஊழியரணி ஆழமான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் போக்கு குறையவேண்டும், என்றார்.

பட்ஜெட் 2021: தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு வேலைவாய்ப்பு ஆதரவு திட்டம் நீட்டிக்கப்படும்!