வாகை சூடிய அர்ஜென்டினா: 30,000 அடி உயரத்தில் வெற்றி கொண்டாட்டம்… தெருக்களில் மக்கள் வெள்ளம் – ஸ்தம்பித்த உலகம்

buenos-aires world cup winning celebration
Twitter

கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றதைத் அடுத்து அதன் பியூனஸ் அயர்ஸ் வீதிகளில் மக்கள் வெள்ளம் போல ஒன்றுகூடினர்.

இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நூறாயிரக்கணக்கான அர்ஜென்டினா மக்கள் அதன் விளையாட்டு ஜெர்சியை அணிந்து, கோஷமிட்டு, அர்ஜென்டினா கொடியை பறக்கவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வெற்றியை தொடர்ந்து, ப்யூனஸ் அயர்ஸின் தெருக்களில் மக்கள் கூட்டம் படிப்படியாக குவியும் வீடியோ இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

30,000 அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோதும் அர்ஜென்டினா மக்கள் வெற்றி கொண்டாட்டங்களை நிகழ்த்தியது ஆச்சரியப்பட வைக்கிறது.

அதோடு மட்டும் நின்றுவிடாமல், உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளை சேர்ந்த அர்ஜென்டினா ரசிகர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.