புக்கிட் பாத்தோக் பேருந்து முனையத்தில் மேலிருந்து கவிழும் பேருந்தின் CCTV காணொளி

Bukit Batok Interchange bus accident CCTV footage
Photo: (buses[IN]gapore!) / FB

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் புக்கிட் பாத்தோக் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்து ஒன்று வெளியேறிக் கொண்டிருந்தது.

அப்போது முனையத்திற்குள் மற்றொரு பேருந்து நுழைந்துக் கொண்டிருந்தது. அச்சமயம், இரண்டு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று நேருக்குநேர் மோதிக் கொண்டது. அதில் ஒரு பேருந்து தடையைத் தாண்டிச் சென்று ஒரு பக்கமாகக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பதினேழு பேர் காயமடைந்தனர், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 15 பேரில் பெரும்பாலானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று டவர் டிரான்சிட் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் (SCDF) காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டு பேருந்துகளும் விபத்துக்குள்ளானதில், ஒரு பேருந்து தடையைத் தாண்டிச் சென்று ஒரு பக்கமாகக் கவிழும் CCTV காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

காணொளி :

இதில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஒட்டியதாகவும், மற்றவர்களுக்கு கடுமையாக காயம் ஏற்படுத்தியதற்காகவும் 65 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை கூறியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.