புக்கிட் பாஞ்ஜாங்கில் தலைகுப்புற கவிழ்ந்த கார் – மூவர் மருத்துவமனையில்…

Bukit Panjang accident
Screenshot

புக்கிட் பாஞ்ஜாங்கில் உள்ள போக்குவரத்து சந்திப்புக்கு அருகே உள்ள சாலையில் கார் கவிழ்ந்து விபத்து (மார்ச் 7) ஏற்பட்டது.

இதில் இரண்டு கார்கள் விபத்தில் சிக்கியதாகவும், பின்னர் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

‘நட்பில்லா’ நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரை சேர்த்துள்ளது ரஷ்யா!

இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு பரவலாக பகிரப்பட்டது.

இந்த விபத்து புக்கிட் பாஞ்ஜாங், புக்கிட் பாஞ்ஜாங் ரிங் ரோடு, பெண்டிங் ரோடு ஆகிய சந்திப்புக்கு இடையில் நடந்துள்ளது.

கவிழ்ந்த வாகனத்தைச் சுற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) வீரர்கள் சீரமைப்பு வேலைகளை செய்து கொண்டிருந்ததையும் வீடியோவில் காண முடிந்தது.

இதில் 56 வயதுடைய ஓட்டுநர், 30 வயதுடைய பெண் ஓட்டுநர் மற்றும் 28 வயதுடைய பெண் பயணி ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.

#Exclusive: சிங்கப்பூரில் தமிழக ஊழியரை 3 மாதங்களாக காணவில்லை: “எப்டியாவது கண்டுபிடிச்சி தாங்க” கண்ணீருடன் பெற்றோர்!