புக்கிட் பஞ்சாங் பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரையில் உலாத்திய ஆடவர் கைது

Photo: Stomp

புக்கிட் பஞ்சாங் ரிங் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 26) பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரையில் உட்கார்ந்தும், நடந்தும் சென்றுகொண்டிருந்ததாக 29 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அன்று மாலை 6.40 மணியளவில் அந்தக் இடத்திற்கு அருகே வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, ​​கூரையில் இருந்த நபரைக் கண்டதாக ஸ்டாம்ப் வாசகர் தெரிவித்துள்ளார்.

சொந்த நாடுகளுக்கு திரும்பிய வெளிநாட்டு ஊழியர்கள் – தடுமாறும் கட்டுமான நிறுவனங்கள்!

அந்த ஆடவரின் செயலை புகைப்படங்கள் மற்றும் காணொளி மூலம் பதிவு செய்த வாசகர், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆன்லைனில் பகிரப்பட்ட மற்ற காணொளிகளில், அந்த ஆடவர் பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரையில் படுத்துக் கொண்டு இருப்பதையும், அதிகாரிகளை புறக்கணிப்பதையும் காணமுடிகிறது.

இரவு 7 மணியளவில், சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) அதிகாரிகள் அந்த நபரை கூரையிலிருந்து வலுக்கட்டாயமாக கீழே கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

மனநல சுகாதார (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) சட்டத்தின் 7வது பிரிவின் கீழ் 29 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எல்லை நடவடிக்கைகள் தளர்த்தப்படுமா?