நான்கு மாடி உயரம் கொண்ட மரம் திடீரென விழுந்து 4 வீடுகள், 3 கார்கள் சேதம்!

Bukit Timah tree fall
(Photo: Shin Min Daily)

சுமார் 40 ஆண்டுகள் பழமையான, நான்கு மாடி உயரம் வரை ஓங்கி நின்ற மரம் ஒன்று திடீரென விழுந்தது, இது நான்கு வீடுகள் மற்றும் மூன்று கார்களையும் சேதப்படுத்தியது.

கடத்த மார்ச் 1ஆம் தேதி இரவு 10 மணியளவில், புக்கிட் திமாவில் உள்ள Toh Yi சாலையில் உள்ள கிஸ்மிஸ் கோர்ட்டில் இந்த சம்பவம் நடந்தது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு

இதில் தரை தள வீட்டில் அதிக சேதம் ஏற்பட்டது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், விழுந்த மரம் 40க்கு மேற்பட்ட பானையில் உள்ள செடிகளையும் சேதப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் 38 வயதான சென் என்பவர், தொலைபேசி வாயிலாக காவல்துறையினருக்கு இதை பற்றி தெரிவித்தார்.

​​அவரது கார் மட்டும் மரத்தில் சிக்கி சேதமடைந்ததை கண்டுபிடித்ததாகக் கூறினார். ஆனால், மேலும் 2 கார்கள் இதில் சேதமடைந்துள்ளன.

ஊழியர்கள் மரம் அறுக்கும் இயந்திரங்களை கொண்டு கிளைகளை வெட்டி அகற்றும் புகைப்படங்களையும் காணமுடிகிறது.

சாலை தடுப்பு வேலியில் மோட்டார் சைக்கிள் மோதி ஓட்டுநர் மரணம்