சிங்கப்பூரின் பரபரப்பான 5 வழி சாலையின் நடுவே ஓடிய சிறுமி – அறிவுபூர்வமாக செயல்பட்டு காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்: குவியும் பாராட்டு

sbs-transit-bus-captain
SBS/FB

சிங்கப்பூரின் பரபரப்பான சாலையின் நடுவில் சிறுமி வெறுங்காலுடன் நடந்து செல்வதைப் பார்த்த ​​​​பேருந்து ஓட்டுநர் ஓங் ஷி ஏதாவது செய்து சிறுமியை காப்பற்ற வேண்டும் என எண்ணினார்.

விரைவாக சிந்தித்து செயல்பட்ட ஓட்டுநர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து நான்கு வயது சிறுமியை சிறப்பாக காப்பாற்றினார்.

‘உன் மொத்த குடும்பமும் உயிரிழக்க நேரிடும்’… சம்பளம் கொடுக்கவில்லை என முதலாளிக்கே மிரட்டல்: பிடிபட்ட ஊழியர்!

அதாவது அறிவுபூர்வமாக சிந்தித்த ஓட்டுநர் பேருந்திலிருந்து வெளியே வந்து, அந்த சிறுமியை பேருந்தின் உள்ளே ஏற்றிச் சென்றார்.

மெரினா பவுல்வார்டு வழியாக, சர்வீஸ் எண் 400 பேருந்தை இயக்கி கொண்டிருந்தபோது, ​​திரு ஓங் அந்த பெண் வெறுங்காலுடன் நடப்பதைக் கண்டார்.

ரெட் சிங்னல் இருந்தபோது, ஐந்து வழிச் சாலையின் குறுக்கே சிறுமி ஓடுவதைப் பார்த்த ஓட்டுநர், ​​​​அந்த சிறுமி ஆபத்தில் இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டதாக அவர் பேஸ்புக் (ஏப்ரல் 12) பதிவில் பகிர்ந்துள்ளார்.

“போக்குவரத்து விளக்கு கிரீன் நிறமாக மாறுவதற்கு முன்பு, உடனடியாக சிறுமியை என் பேருந்தில் ஏற்றிச் செல்ல விரைந்தேன்” என்றார்.

சிறுமி அதற்கு முன்பு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக 8world தெரிவித்துள்ளது.

சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் தேடி அலைந்தனர். நல்ல வேலையாக ஓட்டுநர் சிறுமியை பத்திரமாக காப்பாற்றினார்.

“ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்” – பிரதமர் லீ