சாப்பிட்டுக்கொண்டும், போன் பயன்படுத்தியும் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் – வீடியோ வைரலானதை அடுத்து சஸ்பெண்ட்

bus-driver-use-phone-driving-suspended

சிங்கப்பூர் அதிவிரைவுச்சாலையில் சாப்பிட்டுக்கொண்டும், போனைப் பயன்படுத்திக்கொண்டும் பேருந்து ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த மே 12 ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த காட்சிகள் @painhub243b என்ற பயனரால் TikTok செயலியில் பதிவேற்றப்பட்டன.

Singapore 4D டிராவில் முதல், மூன்றாம் பரிசுக்கு ஒரே வெற்றி எண்… துள்ளிக் குதித்தவருக்கு கடைசியில் இருந்த ட்விஸ்ட்

அந்த வீடியோவில், ஓட்டுநர் தனது இரு கைகளையும் வாகனத்தின் ஸ்டீயரிங்கில் இருந்து முழுவதுமாக எடுத்துவிட்டு எதோ சாப்பிடுகிறார்.

மேலும், ஓட்டுநர் ஒற்றைக்கையில் தனது போனை பார்ப்பது போலவும் அந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து SMRT பேருந்துகளின் துணை நிர்வாக இயக்குநர் வின்சென்ட் கே கூறியதாவது:

“பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை இயக்கிய ஓட்டுனரின் நடத்தையை மன்னிக்க இயலாது. பயணிகள் மற்றும் பிற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பே முதன்மையான ஒன்று.”

“மேலதிக விசாரணைகளுக்காக ஓட்டுநர் பணியில் இருந்து அவரை இடைநீக்கம் செய்துள்ளோம்” என்றார்.

video: https://www.facebook.com/watch/?v=263137229579570