சிங்கப்பூரில் கடும் நடவடிக்கை: 27 வணிக நிறுவனங்கள் மூட உத்தரவு – 341 பேருக்கு அபராதம்

MSE

சிங்கப்பூரில் இந்த மாதம் ஜனவரியில் மட்டும், சுமார் 56 உணவு மற்றும் பான (F&B) கடைகள் மற்றும் 360 தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வேறுபாடு நடவடிக்கைகள் ஆகியவற்றை மீறியதற்காக கடைகள் மற்றும் தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் ஒரே இரவில் 3 இடங்களில் தீ விபத்து – 515 பேர் வெளியேற்றம்

இதனை நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) நேற்று ஜனவரி 28ஆம் தேதி தெரிவித்தது.

இவற்றில், 27 வணிகங்கள் (F&B நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் மால்கள் உட்பட) பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதற்காக மூட உத்தரவிடப்பட்டது.

கடை ஊழியர்களுக்கும் உணவருந்துபவர்களுக்கும் இடையிலான தொடர்புகளை கட்டுப்படுத்த தவறியது, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச குழு அளவை விட அதிகமாக அனுமதித்தது மற்றும் இரவு 10:30 மணிக்கு மேல் மது அருந்த அனுமதித்தது ஆகியவை இதில் அடங்கும்.

குறைந்தது ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளி உறுதி செய்யத் தவறியது, ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்தத் தவறியது மற்றும் வாடிக்கையாளர்களின் தடுப்பூசி நிலையைச் சரிபார்க்கத் தவறியது போன்ற மீறல்களுக்காக மற்ற 29 வணிகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதற்காக மொத்தம் 29 வணிகங்களுக்கு S$1,000 முதல் S$2,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

இரட்டையர் மரணம்: பலத்த பாதுகாப்புடன் தந்தையை சம்பவ இடத்திற்க்கு அழைத்து சென்ற போலீசார் – வீடியோ