போலீஸ் அதிகாரி கையோடு சேர்த்து கண்ணாடியை இறக்கிவிட்டு டாக்ஸியை இயக்கிய ஓட்டுநர் கைது

taxi-fare foreigners singapore

சிங்கப்பூரில் 69 வயதான டாக்சி ஓட்டுநர் ஒருவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் தனது கார் கண்ணாடி மூலம் போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு காயத்தை ஏற்படுத்தியதாகவும், அதோடு சேர்த்து அவரை சாலையில் இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஹாலண்ட் சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அதிகாரி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார், அப்போது டாக்சி ஓட்டுநர் தனது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி கொண்டே வாகனம் ஓட்டியதை அந்த அதிகாரி கண்டதாக சிங்கப்பூர் போலீஸ் படை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

பின்னர் ஓட்டுனரை நிறுத்துமாறு அதிகாரி சைகை காட்டினார், ஆனால் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

தொடர்ந்து கோடிக்கணக்கில் பிடிபடும் கடத்தல் தங்கம் – என்னதான் நடக்குது?

அதனை அடுத்து அவரைப் பின்தொடர்ந்த அதிகாரி, இறுதியில் ஃபாரர் சாலையில் அவரை தடுத்து நிறுத்தினார். பின்னர், அவரை பற்றி விசாரிக்கும்போது, அதற்கு ஓட்டுநர் ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுகிறது.

டாக்ஸியை மீண்டும் ஓட்டிச் செல்லக்கூடும் என்பதை உணர்ந்த அதிகாரி, வாகனத்தின் இயக்கத்தை அணைக்க அதனுள் கையை நீட்டினார். அப்போது, தனது கையை அதிகாரி எடுப்பதற்குள் ஓட்டுநர் டாக்ஸி கண்ணாடியை இறக்கிவிட்டு வண்டியை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

34 வயதான அதிகாரியை அவர் சில மீட்டர்கள் தூரம் வரை சாலையில் இழுத்துச் சென்றுள்ளார் என காவல்துறை கூறியது.

அதனை அடுத்து, பொது ஊழியரை கடமையை செய்யவிடாமல் தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

அதிகாரி சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் அக்டோபர் 14 முதல் சிறப்புவாய்ந்த bivalent தடுப்பூசி!