கரடிக்குட்டி, முயல்குட்டி என கொஞ்சும் அழகிய கேக்குகள் – Clarke Quayவில் உள்ள பிரசித்தி பெற்ற பேக்கரி !

bear and rabbit cake

கேக்குகள், வாஃபிள்கள், மக்கரோன்கள், குக்கீஸ்கள் மற்றும் பல்வேறு பேஸ்ட்ரிகள் மற்றும் இனிப்பு வகைகளில் நிபுணத்துவம் பெற்ற கடையானது Clarke Quay வில் உள்ள The Bakery Chef.

பேஸ்ட்ரி துறையில் கைதேர்ந்த செஃப் கிம், இந்த அபிமான கரடி கேக், பேக்கரியின் அதிக விற்பனையாகும் கேக்குகளில் ஒன்றாகும் என்றும் இது மிகவும் மலிவான விலையில் (S$11.90) கிடைக்கிறது என்றும் வலைபதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கரடி மட்டுமல்லாமல் பேக்கரி செஃப் என கையொப்பத்துடன் “கேலக்ஸி குவானாஜா” என அழைக்கப்படும் மாற்றுமொரு கேக் S$7.30 விலையில் கிடைக்கிறது.

மேலும் அழகான, கஃபேவில் எப்போதும் பிரபலமான “ரெயின்போ பன்னி” எனப்படும் முயல் போன்ற கேக்கும் உள்ளது, இது S$12.80க்கு விற்பனையாகிறது.

பேக்கரி செஃப் பற்றிய விவரங்கள் :

இடம்                       :   2, ஹேவ்லாக் சாலை, ஹேவ்லாக் 2, #B1-19, சிங்கப்பூர்-059763

திறக்கும் நேரம்:   தினமும் காலை 9:30 முதல் மாலை 6:30 மணி வரை

மேலும் விசாரணைகளுக்கு, 9831 5769 என்ற எண்ணில் WhatsApp அல்லது அதன் Facebook வழியாக The Bakery Chef ஐத் தொடர்புகொள்ளலாம் .