‘லிஷா’ ஏற்பாடு செய்துள்ள சூரிய அஸ்தம யோகாவில் பங்கேற்குமாறு அழைப்பு!

Photo: Lisha Official Facebook Page

லிட்டில் இந்திய கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை நிலையம் (Little India Shopkeepers & Heritage Association- ‘LISHA’) ஏற்பாடு செய்துள்ள சூரிய அஸ்தம யோகாவில் (SunSet Street Yoga) பங்கேற்குமாறு சுற்றுலாப் பயணிகள், சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு வஜ்ரங்கி அலங்காரம்!

ஏப்ரல் 8- ஆம் தேதி முதல் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 05.30 PM மணி முதல் மாலை 06.30 PM மணி வரை நடைபெறும், இந்த யோகா நிகழ்விற்கு பங்கேற்பாளர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. கேம்ப்பெல் லேனில் (Campbell Lane) உள்ள இந்திய மரபுடைமை நிலையத்திற்கு (Indian Heritage Centre) வெளியே நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில், சிங்கப்பூரர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்.

யோகா மாஸ்டர் ஜீவன் யோகாவை கற்றுக் கொடுக்க, மற்றவர்கள் அதன்படி யோகா பயிற்சியை செய்தனர். யோகா கலை மனநிம்மதியை தருவதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்புக் கேட்டுக் கொண்ட ‘NTUC FairPrice’ நிறுவனம்- காரணம் என்ன தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் யோகா கலை உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.