பலவிதமாக அவதாரம் எடுக்கும் கஞ்சா! – சிங்கப்பூர் எதிர்கொள்ளவிருக்கும் கடுமையான சவால்கள்

cannabis drug legal in thailand that impact on singapore shanmugam

சிங்கப்பூரின் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி கஞ்சாவைப் பயன்படுத்துவது சட்டவிரோதமல்ல என்று அறிவிக்கப்பட்டது. ஆசிய கண்டத்திலேயே கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்து ஆகும்.

தாய்லாந்தின் இந்த அறிவிப்பின் விளைவு ஒரு வாரத்துக்குள் பல அவதாரங்களில் கஞ்சா தோன்ற ஆரம்பித்தது. உணவு, பானங்கள்,பலகாரங்கள், பற்பசை என அனைத்திலும் போதைப் பொருள் இடம்பிடித்து விட்டதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

அண்டை நாடுகளில் கஞ்சா எளிதில் கிடைக்கும் என்பதால் இது சிங்கப்பூருக்கு மோசமான சவால்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.தாய்லாந்தில் இருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் சிங்கப்பூருக்கு வருகிறார்கள்.

இங்கிருந்தும் சிங்கப்பூரர்கள் அங்கு செல்கிறார்கள்.அங்கு போதைப்பொருள் எளிதாகக் கிடைப்பதால்,அது சிங்கப்பூருக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் எஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளார்.

மரிஜோவானா போதைப்பொருளை மருத்துவத்திற்குப் பயன்படுத்துவதைச் சட்டப்பூர்வமாக்க மலேசியா பரிசீலிக்கும் வேளையில் அது சிங்கப்பூரில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சண்முகம் “மலேசியாவும் கஞ்சா போன்ற போதைப் பொருள்களை சட்டப்பூர்வமாக்கினால்,தாய்லாந்தை விட சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால்,சிங்கப்பூருக்கு பெரும் சவால் ஏற்பட்டுவிடும் என்று கூறினார்.