போதைப்பொருள் கடத்தினால் மரண தண்டனை – சிங்கப்பூரின் Bras Basah சாலைக்கு அருகில் உள்ள ஹோட்டலில் கைது செய்யப்பட்ட நபர்

cannabis found in bras basah hotel room in singapore

சிங்கப்பூரின் Bras Basah சாலைக்கு அருகில் உள்ள விடுதியின் அறையிலிருந்து 4 கிலோவுக்கும் அதிகமான சட்டவிரோதமான போதைப்பொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் மற்றொரு நபர் திங்கள் கிழமை அன்று (May 9) கைது செய்யப்பட்டார்.போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூரரின் வயது 31 ஆகும்.

இந்தப் போதைப் பொருட்களின் (Street value) மதிப்பு $1,77,000 என்று மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு (CNB) புதன்கிழமை (May 11) அறிக்கையில் வெளியிட்டது.அதிகாரிகள் சோதனையின்போது போதைப் பொருட்கள் தொடர்பான பல்வேறு பொருட்களை கைப்பற்றி உள்ளனர்.

65 கி Ice,2155 கி Cannabis,5கி Ketamine,360கி Ecstasy மாத்திரைகள், 1310 கி Erimin- 5 மாத்திரைகள் மற்றும் 7 tampered மாத்திரைகள் போன்றவை சோதனையின்போது மொத்தமாக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கஞ்சா (Cannabis) 307 முறைகேட்டாளர்களின் போதைக்கு போதுமானது என்று CNB தெரிவித்துள்ளது.

கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ கட்டளைகளுக்கு இணங்க மறுத்ததால் அவர்கள் விடுதி அறைக்குள் நுழைய கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது. 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தியதாக உறுதி செய்யப்பட்டால் அந்த நபர் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

விடுதி அறையின் கழிவறை, வடிகால் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.போதைப்பொருள் முறைகேட்டு சட்டத்தின் படி ,ஒரு நபர் சிங்கப்பூரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,அவர் அல்லது மற்றொரு நபர் சார்பாகவும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்துவது குற்றமாகும் .போதைப்பொருள் தொடர்பான புகார் அளிக்க விரும்புபவர்கள் 1800-335-6666 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.