போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய ரெய்டு – 146 சந்தேக நபர்கள் கைது.

cannabis singapore police arrested drug offender

சிங்கப்பூரில் இரண்டு வாரங்களாக நாடளாவிய போதைப்பொருள் தேடலின் போது, போதைப்பொருள் கடத்தலில் மொத்தம் 146 போதைப்பொருள் ஆசாமிகள் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜூன் 6 முதல் ஜூன் 17 வரை நடந்த இந்த நடவடிக்கையின் போது S$55,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் விவரம் இதோ.

• ஹெராயின் – 28 கிராம்
• கிறிஸ்டல் மெத் – 234 கிராம்
• கஞ்சா – 173 கிராம்,
• கெட்டமைன் மற்றும் கொக்கயின் – சிறிதளவு
• மனோதத்துவ மாத்திரைகள் – 10 கிராம்
• 11 எக்ஸ்டஸி மாத்திரைகள்
• ஒரு எரிமின்-5 மாத்திரை
• ஒரு பாட்டில் திரவம் அடங்கிய காமா-ஹைட்ராக்ஸிபியூட்ரேட் (GHB)

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் சில
• ஜூரோங்
• மரைன் பரேட்
• செங்காங்
• யிஷூன்

கைது செய்யப்பட்ட சந்தேகிக்கபட்ட நபர்களிடம் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெறுகிறது. போதைப் பொருட்கள் தீங்கு விளைவிக்கும், அடிமையாக்கும் மற்றும் உயிர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை அழிக்கக்கூடியவை என கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப் பொருட்கள் மீதான சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.

சிங்கப்பூரில் போதைப்பொருள் துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ், கஞ்சா ஒரு பட்டியலிடப்பட்ட ஒரு வகை கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் ஆகும். அதை வைத்திருப்பது, நுகர்வது, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யது ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.