கார் இரண்டாக பிளந்து விபத்து – 26 வயதுமிக்க இளைஞர் மரணம்

car accident CTE car ripped
SG Road Vigilante - SGRV/Facebook

மத்திய விரைவுச்சாலையில் (CTE) நேற்று (ஆகஸ்ட் 11) ஏற்பட்ட விபத்தில் 26 வயதுமிக்க ஆடவர் ஒருவர் இறந்தார்.

SG Road Vigilante என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், சாம்பல் நிற கார் இரண்டாக பிளந்த நிலையில் இருப்பதைக் காணலாம்.

குழந்தைகளை பிரிந்து வாடுவதாக கவலை கொண்ட வெளிநாட்டு ஊழியர் – “உங்களால் தான் இன்று சிங்கப்பூர்” அன்பளிப்பு வழங்கிய சிங்கப்பூரர்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.10 மணிக்கு கார் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தகவல் வந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) கூறியது.

காரில் பயணித்த 26 வயதுடைய ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக SCDF துணை மருத்துவர் உறுதி செய்தார்.

அவருடன் பயணம் செய்து வந்த 26 வயதுமிக்க பெண் ஒருவர் சுயநினைவின்றி கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

மார்பகத்தை மேலும் மெருகேற்ற வேண்டி ஊசி போட்டுக்கொண்ட பெண் மரணம்