பான் தீவு அதிவிரைவுச்சாலையில் (PIE) விபத்துக்குள்ளான “கார் தீப்பிடித்து எரிந்த” அதிர்ச்சி!

Stomp

பான் தீவு அதிவிரைவுச்சாலையில் (PIE) நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) காலை இரண்டு கார் விபத்துக்குள்ளானதில் 33 வயதான ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

அன்று காலை 10.43 மணியளவில் ஜாலான் யூனோஸ் Exit அருகே துவாஸ் நோக்கி செல்லும் PIE சாலையில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளானது குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக ஊழியர் மீது மனைவி கொடுத்த புகார் – கைது செய்த போலீஸ்!

அதனை அடுத்து, விபத்தில் சிக்கியவர்கள் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது ஓட்டுநர் ஒருவர் சுயநினைவுடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

நீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவி மூலம் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தீயை அணைத்தனர்.

மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் SCDF தெரிவித்துள்ளது.

லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத செயல்: ரகசிய கோட் வேர்ட்…ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!