கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது பயங்கரமாக மோதி விபத்து! (காணொளி)

Car crashes road divider
(PHOTO: SG Road Vigilante/YouTube)

சிங்கப்பூர், புக்கிட் திமா அதிவேக நெடுஞ்சாலையில் (BKE) நேற்று முன்தினம் நவம்பர் 27ஆம் தேதி, சாலை பக்கவாட்டு தடுப்பு மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில், 38 வயதான ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் மேலும் ஒரு உயிரிழப்பு!

காணொளி

இந்த சம்பவம் தொடர்பான காணொளி, SG Road Vigilante பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அந்த காணொளியில், கார் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் வலது பாதையில் பயணிப்பதைக் காணலாம்.

அது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாவதை காணமுடிகிறது.

கார் மோதிய வேகத்தில், அதன் பாகங்கள் உடைந்து சாலையின் எங்கும் சிதறுவதை காணமுடிகிறது. இந்த சம்பவத்தில் வேறு எந்த வாகனங்களும் சிக்கவில்லை.

காவல்துறை தகவல்

இந்த சம்பவம் குறித்து, நவம்பர் 27 மதியம் 3:17 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 38 வயதான ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது சுயநினைவு அடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.

கால்வாய்க்குள் தவறி விழுந்த வேன் – குழந்தை உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…