ஆசையாக வாங்கிய வாகனத்தை அலட்சியத்தினால் தொலைத்து விடாதீர்கள்! – சிங்கப்பூரில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

thief arrest spf car steal
சிங்கப்பூர் காவல்துறையினர்,கார் மற்றும் மினி பேருந்து போன்ற வாகனங்கள் தொடர்பான திருட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் 45 வயதுடைய நபரை கைது செய்தனர்.கடந்த அக்டோபர் 6, 2022 அன்று காலை 9:45 மணியளவில், ஜாலான் செம்பக குனிங்கில் நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் காணாமல் போனதாக பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகாரளித்தார்.
காரின் உரிமையாளர் சாவியை வாகனத்தில் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.புகாரைத் தொடர்ந்து கார் மீட்கப்பட்டது. இதே போல,அக்டோபர் 25 அன்று மோட்டார் வாகனம் திருடப்பட்டது குறித்து காவல்துறையினருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.மேலும், பேருந்து ஓட்டுனர் சாவியை பேருந்தில் வைத்துவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கிய பிறகு கைது செய்யப்பட்ட நபர் மினி பேருந்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

விசாரணைகள் மூலமாகவும், போலீஸ் கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாகவும் மினி பஸ் மீட்கப்பட்டது.திருட்டில் ஈடுபட்ட நபரின் அடையாளத்தைக் கண்டுபிடித்து 45 வயதுடைய நபரை பெடோக் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நவம்பர் 3 அன்று கைது செய்தனர்.
வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக அந்த நபர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.இதனையடுத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளனர்.
கடுமையாக உழைத்து அன்றாடத் தேவைக்காக ஆசையாக வாங்கிய வாகனத்தை ஒரு நிமிட அலட்சியத்தினால் பறிகொடுக்க வேண்டாம்.வாகனத்தை விட்டு இறங்கும் போது சாவியை உடன் எடுத்து செல்லுங்கள்.
வாகனத்தை பெரும்பாலும் வெளிச்சமான இடங்களில் நிறுத்தி விட்டு செல்லுங்கள்.வாகனங்களில் கண்ணாடிகளை முழுமையாக ஏற்றிவிட்டுச் செல்லுங்கள்.இதன் மூலம் வாகனத் திருட்டைத் தவிர்க்க முடியும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.