உச்சத்தை எட்டும் கார்பன் உமிழ்வு! – சிங்கப்பூரில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த இதுதான் வழியா?

NEA takes action against highrise litter
(Photo: GOV.SG)
உலகம் வெப்பமயமாதலால் பல்வேறு இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்து வருகின்ற சூழலில் சிங்கப்பூரில் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2030-ஆம் ஆண்டின் கார்பன் உமிழ்வுக்கான இலக்கை 2025 மற்றும் 2028 க்கு இடையில் உச்சத்தை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ செவ்வாயன்று தெரிவித்தார்.
சிங்கப்பூரின் கார்பன் உமிழ்வு உச்சத்தை எப்போது எட்டும் என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.சென்ற மாதம் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூர் சர்வதேச எரிசக்தி வாரத்தில் சிங்கப்பூர் அதன் நீண்ட கால குறைந்த உமிழ்வு மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைய அதன் காலநிலை இலக்கை உயர்த்தும் என்று அறிவித்தார்.

சிங்கப்பூர் 2030 ஆம் ஆண்டில் 60 மில்லியன் டன்களுக்கு இணையான கார்பன் டை ஆக்சைடுக்கு (MtCO2e) உமிழ்வுகளை குறைக்கும் என்று திரு வோங் கூறினார்.2025 மற்றும் 2028 க்கு இடையில் நமது உமிழ்வானது 65 மில்லியன் டன்களாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.5 மில்லியன் டன்கள் உமிழ்வினைக் குறைப்பது கணிசமானது.இது இன்று வீடுகளில் இருந்து வெளியேறும் மொத்த உமிழ்வை விட அதிகம் என்று திருமதி ஃபூ கூறினார்.