படிப்படியாக உயரும் வரி! – சிங்கப்பூரில் 2030-இல் ஒரு டன் கரிமக்கழிவுக்கான வரி இதுதான்!

singapore air pollution indonesia forest fire
singapore

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்று கரிமக் கழிவு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.சிங்கப்பூரில் 2024-ஆம் ஆண்டிலிருந்து,கரிமக் கழிவு வரியானது ஒரு டன்னுக்கு $25 ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.தற்போது ஒரு டன் கரிமக் கழிவுக்கான வரி $5 ஆக உள்ளது.மேலும்,2026 முதல் 2027-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு டன் கரிமக்கழிவின் வரி $45 ஆக உயரும்.

அதையடுத்து 2030-ஆம் ஆண்டுப் பொழுதில் வரியானது $50 முதல் $80 வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.படிப்படியாக கரிமக்கழிவு வரியை உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாக நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் பூ நாடாளுமன்றத்தில் கூறினார்.

வரி உயர்வு குறித்து நிறுவனங்களுக்கு முன்னதாகவே உரிய கால அவகாசத்துடன் தெரிவிக்கப்படும்.பின்னர் படிப்படியாக வரி உயர்த்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கரிமக்கழிவு திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.

தற்போது ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 25,000 டன் கரிமக்கழிவை வெளியிடும் நிறுவனங்கள் வரியைச் செலுத்த வேண்டும்.இவற்றில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்,மின்சக்தி ஆலைகள் போன்ற நாற்பது பெரும் நிறுவனங்கள் அடங்கும்.