‘Carousell’ நிறுவனம் எடுத்த முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி!

Photo: carousell

சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ‘Carousell. ஆன்லைன் மூலம் செல்போன், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் விற்பனை செய்து வரும் பிரபல இ-காமெர்ஸ் நிறுவனம் ஆகும். மலேசியா, பிலிப்பைன்ஸ், கனடா, நியூசிலாந்து, ஹாங்காங், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கம்போடியா, தைவான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் இயங்கி வருகின்றது.

பன்றியின் ரத்தக்கட்டிகளை விற்ற பெண்! – ஆன்லைனில் அமோக விற்பனை;இறுதியில் விதிக்கப்பட்ட அபராதம்!

உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவீனங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், ‘Carousell’ இ-காமெர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கள் நிறுவனத்தில் சில வணிகப் பிரிவுகளில் பணிபுரிந்து வந்த சுமார் 110 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மொத்த ஊழியர்களில் 50% ஆகும்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு குறைந்தது மூன்று மாதங்கள் சம்பளம் வழங்கப்படும். மருத்துவச் சலுகைகளும், காப்புறுதித் திட்டங்களும் அடுத்தாண்டு ஜூன் மாதம் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.

நேரா அங்கதான் மோதி பஞ்சராகிருக்கு ! – வந்த கொஞ்ச நாள்லயே இப்படியா ஆகணும்!

ஊழியர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாத வண்ணம் மனநல மருத்துவர்களைக் கொண்டு அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும். அத்துடன், புதிய வேலைத் தேடுவதற்கான ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை எங்களது நிறுவனம் சார்பில் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.