டாக்சிகள் மற்றும் வாடகை கார்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Photo: Mediacorp

 

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு படிப்படியாக விலக்கிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் டாக்சிகள் (Taxis) மற்றும் தனியார் வாடகை கார்களின் சேவைகளில் (Private Hire Cars Services) செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் வரும் ஜூன் 14- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் பயணிகள் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்களை நிலப்போக்குவரத்து ஆணையம் (Land Transport Authority) அறிவித்துள்ளது.

 

டாக்சிகள் மற்றும் தனியார் வாடகை கார்களுக்கானப் பாதுகாப்பு மேலாண்மை வழிகாட்டுதல்!

 

1. டாக்சிகள் மற்றும் தனியார் வாடகை கார்களுக்கான பயணிகள் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு பயணிகள் மட்டுமே வாகனங்களில் பயணம் செய்ய முடியும் என்ற வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இனி வாகன ஓட்டுனரைத் தவிர 5 பேர் வரை குழுவாக பயணம் செய்யலாம்.

 

2. கார் பூலிங் சேவைகளை (Car Pooling Services) மீண்டும் தொடங்குதல். உரிமம் பெற்ற கிராபிட்ச் (GrabHitch) மற்றும் ரைட்பூல் (RydePool) போன்ற தனியார் வாகன சேவைகள் வரும் ஜூன் 14- ஆம் தேதி முதல் தொடங்கலாம். அதேசமயம் டெலிகிராம் செயல் வழியாக ஏற்பாடு செய்யப்படும் குழு பயணம் சேவைகள் சட்டவிரோதமாக கருதப்படும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், சக ஊழியர்களுக்கு கட்டணம் இல்லாத கார் பூலிங் பயணங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வாகன ஓட்டுனர்களைத் தவிர குழுவாக 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

 

3. முகக்கவசம் (Mask) அணியாத பயணிகளை டாக்சிகள் மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களில் பயணிக்க அனுமதிக்கக் கூடாது; அந்த பயணிகளை நிராகரிக்க வேண்டும்.

 

4. டிரேஸ்டூகெதர் டோக்கனை (Tracetogether Token) எடுத்துச் செல்லுங்கள் அல்லது ஸ்மார்ட்போன் (Smartphone App) செயலியைப் பதிவிறக்கம். இது தொடர்பு கண்டுபிடிக்கும் முயற்சிகளை எளிதாக்குகிறது. முன்கூட்டியே கண்டறிவதால் உங்கள் அன்புக்குரியவர்களையும், சமூகத்தையும் பாதுகாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.