பூனைக்கு நீதி கோரி ஆன்லைனில் குவியும் மனு! – மாடியிலிருந்து வீசப்பட்ட பூனை!

PC- Mothership.sg
சிங்கப்பூரில் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரிய (HDB) குடியிருப்பில் இருந்து தூக்கி வீசப்பட்ட பூனைக்கு நீதி கோரி சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இணையவாசிகள் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டனர்.டிசம்பர் 15 அன்று Change.org இல் இந்த கோரிக்கை மனுவை தொடங்கி வைத்தனர்.
டிசம்பர் 14 மதியம் 1:35 மணியளவில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் , ஒரு சிறுவன் பூனையைத் தூக்கிக் கொண்டு லிப்டில் இருந்து வெளியேறுவது தெரிந்தது.சிறுவன் தூக்கிச் சென்ற பூனையை மாடியிலிருந்து வீசினான்.
பிளாக் 186 பூன் லே அவென்யூவின் 22வது மாடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவம் சிங்கப்பூரில் உள்ள பூனைகளை நேசிக்கும் சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரின் விலங்குகள் வதை தடுப்புச் சங்கத்தின் (SPCA) முகநூல் பதிவில் SPCA இந்த வழக்கு குறித்து எச்சரிக்கப்பட்டதாகவும், இது போன்ற விலங்கு துன்புறுத்தல் செயல்களுக்கு நம் சமூகத்தில் இடமில்லை என்றும் கூறியது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நடந்து வருவதால், வழக்கின் விவரங்களை யாரும் யூகிக்க வேண்டாம் என்றும் NParks இல் உள்ள விலங்குகள் மற்றும் கால்நடை மருத்துவ சேவையின் (AVS) குழு இயக்குனர் ஜெசிகா குவாக் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.