தி கேத்தேக்கு வெளியே வாரந்தோறும் நடக்கும் இசைநிகழ்ச்சிகளுக்கு ஆகஸ்ட் 13 வரை இசைக்கலைஞர்களால் முன்பதிவு !

cathay buskers

Jeff NG வழக்கமாக கூடும் இடமான தி கேத்தேக்கு வெளியே மற்ற இசைக் கலைஞர்களால் வரும் சனிக்கிழமைகளில் ஆகஸ்ட் 13 வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 பரவல் அதிகரித்ததைக் காரணம் காட்டி, ஜூலை 2 மற்றும் ஜூலை 9 ஆம் தேதிகளில் Ng தனது முந்தைய இரண்டு இசை நிகழ்ச்சியை ரத்து செய்தது  குறிப்பிடத்தக்கது.

தேசிய கலை கவுன்சிலான NAC தளத்தின்படி, வரும் வாரங்களில் யாரெல்லாம் இசைக்கவிருக்கிறார்கள் என்னும் பட்டியல் கீழே :

  • ஜூலை 16 – Chin Jun Wei Jeremy
  • ஜூலை 23 – Han Ming Siew Jeremy
  • ஜூலை 30 – Chin Jun Wei Jeremy
  • ஆகஸ்ட் 6 – THE ETC
  • ஆகஸ்ட் 13 – Soon Tzu Hsiang

மாதந்தோறும் 1 மற்றும் 15 தேதிகளில் இசை நிகழ்ச்சிகளின் முன்பதிவு திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.