சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை இனி ஜெயண்ட், அங் மோ சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பயன்படுத்தலாம்!

Photo: Low Yen Ling Official Facebook page

ஜனவரி 3- ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட நடப்பாண்டிற்கான 300 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் (CDC Vouchers) வழங்கும் பணி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் வசித்து வரும் ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

தேர்தல் பிரச்சார சுவரொட்டியை சேதப்படுத்திய நபருக்கு அபராதம்

இந்த நிலையில், சிங்கப்பூரின் தென்மேற்கு மாவட்ட மேயர் லோ யென் லிங் (Low Yen Ling) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை 90% சிங்கப்பூர் குடும்பங்கள் பெற்றுக் கொண்டுவிட்டன. அதாவது, 1.1 மில்லியனுக்கு மேற்பட்ட சிங்கப்பூர் குடும்பங்கள் 300 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பெற்று கொண்டுள்ளனர்.

இந்த சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை என்டியூசி ஃபேர்பிரைஸ் (NTUC FairPrice), ஷெங் சியாங் (Sheng Siong), பிரைம் (Prime), ஹாவ் மார்ட் (HAO Mart), யூ ஸ்டார்ஸ் (U Stars) ஆகிய ஏழு சூப்பர் மார்க்கெட்டுகளிலும் (Super Markets), அதன் கிளைகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பற்றுச்சீட்டுகளை இனி ஜெயண்ட் (Giant) மற்றும் அங் மோ (Ang Mo) ஆகிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மற்றும் அதன் கிளைகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஏழு சூப்பர் மார்க்கெட்டுகளின் கிளைகளையும் சேர்த்து மொத்தம் 360- க்கும் மேற்பட்ட கடைகளிலும், 20,600- க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பேட்டைக் கடைகளிலும் சிங்கப்பூரர்கள் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஒரு மாதத்துக்கும் குறைவான காலக்கட்டத்தில் 132 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2021, 2022 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டுக்கான சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் திட்டம் தொடங்கப்பட்ட முதல் 30 நாட்களுக்குள் 15% சிங்கப்பூர் குடும்பங்கள் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

அதிக அளவிலான பற்றுச்சீட்டுகள் உள்ளூர் வணிகத்தை ஊக்குவித்திருப்பதோடு, சிங்கப்பூர் குடும்பங்களின் செலவினத்தைக் குறைக்கவும் உதவியிருக்கிறது.

சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் திட்டத்திற்கு ஆதரவளித்த சிங்கப்பூர் குடும்பங்கள், வணிகர்கள், உணவங்காடிக் கடைக்காரர்கள் அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துக் கொண்டார்.