சிங்கப்பூர் குடும்பங்களுக்கு மேலும் 100 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள்!

Photo: CDC Vouchers 2022

சிங்கப்பூர் குடும்பங்கள் ஒவ்வொன்றும் இன்று (11/05/2022) முதல் 100 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பற்றுச்சீட்டுகளைப் பெற 1.3 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.

திக்குமுக்காடச் செய்யும் கொக்கோ கோலாவின் புதிய சுவை பானம் – சிங்கப்பூரில் மே 16 முதல் விண்வெளி பானம் அறிமுகம்

அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் தங்களுக்கு பிடித்தமான பங்குபெறும் குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும், உணவங்காடிக் கடைகளிலும் பயன்படுத்தக் கூடிய சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் (Community Development Councils- ‘CDCs’)மேலும் 100 வெள்ளி மதிப்பில் வழங்கப்படும். 2022- ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட 100 வெள்ளி மதிப்புள்ள புதிய பற்றுச்சீட்டுகள் கடந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பற்றுச்சீட்டுகளுக்கு மேலாக வழங்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த குடும்பத்தின் சார்பில் ஒரு குடும்ப உறுப்பினர் தனது சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்திப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். பற்றுச்சீட்டுகள் 31 டிசம்பர் 2022 வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 13- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தங்கள் வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவுவதோடு, அதே நேரத்தில், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு ஆதரவளிக்கவும், இந்த பற்றுச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.