உங்களுக்கான ‘CDC’ பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது எப்படி?

Photo: gov.sg

புதிய சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் (COMMUNITY DEVELOPMENT COUNCIL – ‘CDC Voucher’) திட்டம், 2021- ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்திற்கும் 100 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை வழங்கும். உங்களுக்கான பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள கைப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. பற்றுச்சீட்டுகளை இணையம்வழி எளிதில் பெற்றுக் கொண்டு, பங்குபெறும் உணவங்காடி கடைகளிலும், குடியிருப்பு வட்டார வணிகக் கடைகளிலும் பயன்படுத்தி அவர்களுக்கு ஆதரவளியுங்கள்.

போலி ஆடம்பரமான பொருட்கள் விற்பனை – சந்தேகத்தில் ஆடவர் கைது

உங்களுக்கான ‘CDC’ பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது எப்படி?

முதலில், உங்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும் அறிவிப்பு கடிதத்தை எதிர்பார்த்திருங்கள். ஒரு குடும்பத்தின் சார்பில் ஒருவர் மட்டும் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்டால் போதும். QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள் அல்லது go.gov.sg/cdcv என்ற இணையப் பக்கத்திற்கு செல்லுங்கள். அடுத்து, சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி, ஒருமுறை உட்பதிவு செய்யுங்கள்.உங்கள் கைப்பேசி எண்ணையும், One- Time Password, அதாவது ஒருமுறைப் பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் உள்ளிடுங்கள். உங்களுக்கான பற்றுச்சீட்டுகளை நீங்கள் பெற்றுக் கொண்டு விட்டீர்கள். பற்றுச்சீட்டின் இணைப்பை RedeemSG அனுப்பும் குறுந்தகவல் வாயிலாகவும் பெறுவீர்கள்.

உங்களுக்கான பற்றுச்சீட்டுகளைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் go.gov.sg/cdcv இணையப் பக்கத்தில் இருந்து எளிதில் மீட்கலாம். பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? மிகவும் சுலபம்! ‘பற்றுச்சீட்டின் இணைப்பைப் பகிர்க’ என்பதை அழுத்தி இணைப்பை நகலெடுங்கள். ஒரு குறுந்தகவலை உருவாக்கி, அதில் இணைப்பை ஒட்டி அனுப்புங்கள்! இப்போது உங்கள் குடும்பத்தினரும் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூர் விமானநிலையத்தில் பரபரப்பு – கூண்டில் இருந்து எஸ்கேப் ஆன சிங்கங்கள்!

நீங்கள் பயன்பாட்டு உரிமையைத் தர விரும்புவோருடன் மட்டுமே, இந்த இணைப்பை பகிருங்கள். சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டு சின்னம் கொண்ட பங்குபெறும் உணவங்காடிக் கடைகளிலும், உங்கள் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துங்கள்! உங்களது குறுந்தகவல் இணைப்பை அழுத்துங்கள். நீங்கள் பயன்படுத்த விரும்பும் பற்றுச்சீட்டுகளைத் தேர்ந்தெடுத்து, ‘இப்போது மீட்கவும்’ என்பதை அழுத்தி ஸ்கேன் செய்வதற்காக QR குறியீட்டைக் காட்டுங்கள். ஒவ்வொரு பற்றுச்சீட்டையும் உங்கள் குடும்பம், ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

இது தொடர்பாக, உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தால் நேரடி தொலைபேசி எண் 6225 5322 தொடர்புக் கொள்ளுங்கள் அல்லது cdc.gov.sg/cdcvouchers/residents என்ற இணைய பக்கத்தை நாடுங்கள்.

சிங்கப்பூரில் மேலும் 339 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

பற்றுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யவோ, பயன்படுத்தவோ உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், அல்லது உங்களிடம் திறன் பேசியோ சிங்பாஸ் கணக்கோ இலலவிட்டால் அல்லது பற்றுச்சீட்டுகளை அச்சிட வேண்டுமானால், உங்கள் அருகில் உள்ள சமூக மன்றத்திற்குச் செல்லுங்கள். சமூக மன்ற ஊழியர்களும், தொண்டூழியர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள். பற்றுச்சீட்டுகள் 31 டிசம்பர் 2022 வரை செல்லுபடியாகும்.

உங்களுக்கான பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு, நமது உணவங்காடிக் கடைக்காரர்களுக்கும், குடியிருப்பு வட்டார வணிகர்களுக்கும் ஆதரவளியுங்கள்!