கொண்டாடும் SG திட்டம் – சிங்கப்பூரில் உள்ள குடும்பங்களுக்கான ஆதரவை அரசாங்கம் பலப்படுத்தும் என்று கூறிய பிரதமர் லீ

தேசிய குடும்ப வாரத்தின் தொடக்க விழாவில் சனிக்கிழமை யன்று (June 4) சிங்கப்பூர் பிரதமர் லீ பங்கேற்றார். சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார். “அனைத்து குடும்பங்களும் சமூகத்தின் அடித்தளம் என்று கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து குடும்பங்களும் நமது ஆளுமையையும் நம்பிக்கையும் வடிவமைப்பதோடு அவை நமது சமூகத்தில் சேர்ந்தவை என்ற உணர்வை நங்கூரமிடுகின்றன” என்று விழாவில் உரையாற்றினார்.

சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்து குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதோடு சிங்கப்பூரை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லும் என்று கூறினார்.

திருமணம் மற்றும் பெற்றோர் நலன்கள் போன்றவை உட்பட குடும்ப நலன்களை ஆதரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சன்டெக் சிங்கப்பூர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் உரையாற்றியபோது பிரதமர் லீ குறிப்பிட்டார்.

“எங்கள் வீட்டு உரிமை கொள்கைகள் , பெரும்பான்மையானவர்கள் HDB வீடுகளை உரிமையாக்கிக் கொள்ளவும் குடும்பங்களையும் முன்னேற்றவும் அனுமதிக்கின்றன.

ஒவ்வொரு சிங்கப்பூர் குழந்தைக்கும் வாழ்க்கையில் நல்ல தொடக்கத்தை கொடுக்க ஆரம்ப பள்ளிக் கல்வியை மேம்படுத்தி உள்ளோம்.சமூகத்தில் முதியோர்களுக்கு தொடர்ந்து ஆதரவுகளை விரிவு படுத்துகிறோம் ” என்று தெரிவித்தார்.

சமூகம் மற்றும் பொதுமக்களிடமிருந்து குடும்ப நலன்கள் குறித்து கருத்துக்களைப் பெற்று ,சமூக மற்றும் குடும்ப நல மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து ,இந்த ஈடுபாடுகளிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகளை இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கவிருக்கும் கொண்டாடும் SG குடும்பங்கள் திட்டத்தில் இணைக்கும் என்று குறிப்பிட்டார்.