வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

PHOTOS: CENTRAL NARCOTICS BUREAU

 

சிங்கப்பூரில் பல்வேறு இடங்களிலும் மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றன. அந்த வகையில் சிக்லாப் வாக் அருகே உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் (22/06/2021) அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

 

அப்போது, அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,159 கிராம் கஞ்சா, 14 கிராம் ஐஸ், 9 கிராம் கொக்கேன், 79 எக்ஸ்டசி மாத்திரைகள், எரிமின்-5 மாத்திரை, 108 எல்எஸ்டி முத்திரைகள், கஞ்சா கலக்கப்பட்டதாக நம்பப்படும் ரொட்டி, கேக் போன்ற 51 பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 57,000 சிங்கப்பூர் டாலருக்கு அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றன. மேலும் வீட்டில் இருந்த 4,100 சிங்கப்பூர் டாலரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

இது தொடர்பாக, மூன்று ஆண் நபர்களையும், ஒரு மாதுவையும் அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.