அதிரடியாக சோதனை செய்த அதிகாரிகள்…. 2,34,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Photo: Central Narcotics Bureau Official website

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அரசின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் (Central Narcotics Bureau- ‘CNB’), அவ்வப்போது வாகனத் தணிக்கையிலும், தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி, லிட்டில் இந்தியாவில் பொருள்களை வாங்க குவிந்த மக்கள்!

அந்த வகையில், சிங்கப்பூரின் முக்கிய பகுதிகளான அங் மோ கியோ (Ang Mo Kio), ஹவ்காங் (Hougang), கேலாங் (Geylang), தோ பாயோ (Toa Payoh) ஆகிய இடங்களில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அதில், சுமார் 2,34,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருட்களை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த அதிரடி சோதனையின் போது, 59 வயது ஆண் நபர் உள்பட மூன்று பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், போதைப்பொருள் விவகாரத்தில் 161 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“சென்னை- சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை”- இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

2,876 கிராம் ஹெராயின் (Heroin), 209 கிராம் ஐஸ் (ICE), 1 கிராம் கெட்டமைன் (ketamine), 23 கிராம் கஞ்சா (cannabis), 5 எக்ஸ்டசி மாத்திரைகள் (Ecstasy Tablets), 2 எரிமின்- 5 மாத்திரைகள் (Erimin-5 tablets), ஒரு பாட்டில் மெத்தடோன் (Bottle of methadone) ஆகியவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.