சிங்கப்பூரர்கள் பொருளாதார நெருக்கடியின்போது பொறுமையாக இருப்பது சிறந்தது ! – கல்வித்துறை அமைச்சரின் அறிவுரை

Photo: gov.sg

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் போது சிங்கப்பூரர்கள் அமைதிக்காக்க வேண்டும்.நெருக்கடியின் போது அந்த சூழலுக்கு ஏற்றவாறு மாறிக்கொள்பவர்களாக இருப்பது அவசியம் என்று கல்வித்துறை அமைச்சர் சான் கன் சிங் கூறினார்.

இவ்வாறு சிங்கப்பூரர்கள் பின்பற்றினால் தனக்கு வேண்டிய பொருள்களை நாடு இறக்குமதி செய்யும்போது அதிக பயன்கள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதாவது கடுமையான விலை உயர்வு போன்ற பொருளாதார நெருக்கடியின்போது அனைவரும் பொறுமையுடன் அமைதியாக இருந்தால் நமக்கு வேண்டிய பொருள்கள் கட்டுபடியாகக் கூடிய விலையில் கிட்டும் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் விளக்கினார்.

பொருளாதார சிக்கலின்போது பயந்துவிட்டதாக மற்றவர்கள் நினைத்தால்,அவர்கள் விலைவாசியை எற்றிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் கூறினார்.இருப்பதை வைத்து நீக்குப்போக்காக நடந்து கொள்வது நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

பொருள்,சேவை விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க சிங்கப்பூர் மூன்று நடவடிக்கைகளை அமல்படுத்துகிறது.உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது,இறக்குமதிகளைப் பல்முனைப்படுத்துவது,பொருள்களை அதிகம் இருப்பு வைப்பது ஆகிய மூன்று நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.