“டெர்மினல் 2 படிப்படியாக திறக்கப்படும்”: எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதால் விமான நிலைய ஆட்சேர்ப்பு அதிகரிக்கும்!

travel-to-malaysia-cny-2024
Pic: File/TODAY

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 2 இந்த ஆண்டு படிப்படியாக திறக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்தார்.

இன்று மார்ச் 30ஆம் தேதி சிங்கப்பூரில் விமான பயணம் மீண்டும் தொடங்கும் நிலையில், சிங்கப்பூரில் விமானப் போக்குவரத்துத் துறை தயாராக இருப்பதை உறுதி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக திரு ஈஸ்வரன் இதை கூறினார்.

சிங்கப்பூரில் “தமிழக ஊழியர்” கடும் வெயில், மழை பாராது உழைத்து வாங்கிய எலக்ட்ரிக் பைக்… திடீரென தீப்பற்றி எரிந்து நாசம்

கோவிட்-19 தொற்றுநோய் பரவ தொடங்கியதில் இருந்து, விமானப் போக்குவரத்துத் துறை அதன் ஊழியர்களின் கணிசமான விகிதத்தை இழந்துள்ளது.

சிங்கப்பூரில் எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதால், விமான நிலைய செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஊழியர்கள் ஆட்சேர்ப்பு அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், விமானப் போக்குவரத்து துறை சரியான முறையில் செயல்பட தேவையான ஆட்சேர்ப்பை அதிகரிப்பது முக்கியச் சவாலாக இருக்கும், என்றார்.

சிங்கப்பூருக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிப்பவர்களுக்கான மத்திய பாதையாக டெர்மினல் 1 மற்றும் 3 ஆகியவை தொடர்ந்து இருக்கும் என்று ஈஸ்வரன் கூறினார்.

தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டும் “ஊழியர்கள் வேலையிட இறப்புகள்” – கண்காணிப்பு, பயிற்சியை மேம்படுத்தும் MOM