சாங்கி விமான நிலையத்தில் லக்கேஜ் பைகளுடன் செல்வோர்க்கு இந்த அறிவிப்பு – ஏர் இந்தியா பயணிகளுக்கும்….

changi-airport-baggage-tracker
Changi Airport Group

சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் தற்போது தங்கள் லக்கேஜ்களைக் கண்காணிக்கும் வகையில் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிச. 12 அன்று தொடங்கப்பட்ட தனிப்பட்ட உடமைகளை கண்காணிக்கும் வசதி அறிமுகம் ஆனது.

வேலையிடத்தில் கீழே விழுந்த வெளிநாட்டு ஊழியர் – தொடரும் விபத்துகள்… தற்போது ஊழியரின் நிலை?

மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திற்கு வரும் உடமைகளை தாமதமானால், பயணிகள் தங்கள் லக்கேஜ் பைகளின் நிலையைக் கண்காணிக்க முடியும், மேலும் புதுப்பிப்புகளைபயும் பெற முடியும்.

விமான பயணத்திற்கு பிறகு சுமார் மூன்று நாட்கள் வரை லக்கேஜ் பைகளை நம்மால் கண்காணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் முதன் முறையாக சிங்கப்பூரில் தான் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலைய குழு கூறியுள்ளது.

ஆனால் iChangi டிராக்கர் செயலி தற்போது பீட்டா சோதனையில் இருப்பதால், தற்போது குறைவாகவே பயன்பாட்டில் உள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஃபின்னேர், ஜெட்ஸ்டார் ஏசியா மற்றும் ஏர் இந்தியா போன்ற 35 விமான நிறுவன பயணிகளுக்கு மட்டுமே இந்தச் செயலி பயன்படும்.

பலர் பொறாமைப்படும் அளவிற்கு மெல்லிய உடல்… 33 வயது பிரபலத்தின் கடும் முயற்சி (Video): நெட்டிசன்கள் வியப்பு