பழைய நிலைக்கு மாறும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் – டாப் ஐந்தில் இந்தியர்கள்

சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் 2022 நிலவரப்படி, சுமார் 3.42 மில்லியன் பயணிகள் வந்துசென்றுள்ளனர்.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் கோவிட்-க்கு முந்தைய நிலையில் 62.6 சதவீதத்தை விமான நிலையம் எட்டியது.

நியூ அப்பர் சாங்கி சாலையில் ஒருவரை ஆயுதத்தால் தாக்கிய சந்தேகத்தில் ஆடவர் கைது

கடந்த 2019 செப்டம்பர் நிலவரப்படி, விமானம் தரையிறங்குதல் மற்றும் புறப்படுதல் உள்ளிட்ட விமான இயக்கங்கள் மொத்தம் 20,400 அதாவது 65.6% என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிட்டத்தட்ட 63 சதவீதத்தை விமான நிலையம் நெருங்கியது.

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரை, சாங்கி விமான நிலையத்தில் 10 மில்லியன் பயணிகள் வந்துசென்றுள்ளனர். இது கோவிட்-க்கு முந்தைய நிலைகளில் 58.1% ஆகும்.

முதல் ஐந்து போக்குவரத்து

ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பயணங்களில் முதன்மை வகிக்கின்றன.

மனைவியை கத்தியால் தாக்குவேன் என மிரட்டல் – போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளே தள்ளிய மனைவி