சிங்கப்பூரில் பயணத் தளர்வு: 2 ஆண்டுகளுக்கு பிறகு சாங்கி விமான நிலையத்தில் காணப்பட்ட வரிசைகள், மக்கள் கூட்டம்!

automated-immigration-lanes for foreigners pr
Joshua Lee

சாங்கி விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக செக்-இன் கவுண்டர்களுக்கு முன்னால் காணப்படாத வரிசைகள் இன்று வெள்ளிக்கிழமை காலை (ஏப்ரல் 1) அதிக அளவில் காணப்பட்டன.

இதற்கு முன்னர் பெரும்பாலும் காலியாக இருந்த முனையங்களில் பயணிகள் தங்கள் உடமைகளை இழுத்துச் செல்வதையும், காட்சித் திரைகளில் விமான அட்டவணையைச் சரிபார்த்துக் கொண்டிருப்பதையும் இன்று காண முடிந்தது.

இரு பேருந்துகள் பயங்கர விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – 37 பேர் மருத்துவமனையில் அனுமதி

அதோடு மட்டுமல்லாமல், விமான நிலைய நடைபாதைகள் மற்றும் ஓட்டல்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சிங்கப்பூர், தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட பயணிகளுக்கு தனிமை இல்லாத பயணத்தை தொடங்கிய முதல் நாளில், முனையம் 1 மற்றும் முனையம் 3 தற்காலிக இயல்புநிலை திரும்பியது.

விமான நிலையத்தை பழைய நிலையில் பரபரப்பாக காண்பது உண்மையில் நமக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தளர்வுகள்

சிங்கப்பூரில் இன்று ஏப். 1 முதல் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் நுழைவு அனுமதி தேவை இல்லை – Travel update

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, CPM துறைகள், Work permit, S Pass ஊழியர்களுக்கு ஏப். 1 முதல் இது கட்டாயம்!