சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனைய கட்டுமான பணிகள் மீண்டும் தொடரும் – அமைச்சர் எஸ் ஈஸ்வரன்

changi airport

சாங்கி விமான நிலைய முனையம்- 5ன் வேலை 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துவங்கப்பட்டது

இதன் வேலைப்பாடுகள் மே17ல் துவங்கி இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு முனையம்5 2030ன் பாதியில் செயல்பாட்டிற்கு வரும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்

இதன் வேலைப்பாடுகள் மே2020ல் கோவிட் பரவலின் போது துவங்கப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டது
எனினும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் கோவிட் பரவலின் தாக்கத்தில் இருந்து எதிர்பார்த்ததை வேகமாக மீண்டு வருகின்றது

முனையம்5 ன் நிறைவானது பயணிகள் போக்குவரத்தின் அதிகரிப்பை மையமாக வைத்தும் எதிர்காலத் திறனை கருத்தில் கொண்டும் கட்டமைக்கப்படும் என்றும் ஈஸ்வரன் இரண்டு நாள் சாங்கி விமான உச்சி மாநாட்டில் கூறினார். இம்மாநாடு சாண்ட்ஸ் எக்ஸ்போ & கன்வென்ஷன் மையத்தில் 300 பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது.

“விமானப் பயணத் தேவையின் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட மீட்சியைக் கருத்தில் கொண்டு, வளர்ச்சிக்கான எங்கள் உள்கட்டமைப்பு திறனைப் பாதுகாப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட உத்வேகம் எங்களிடம் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

முனையம்5ன் வடிவமைப்பு புதிக்கப்பட்டு , எல்லாருக்கும் ஏதுவான தன்மையை கொண்டுள்ளது என்றும் அது விரைவில் சுத்திகரிக்கபடும் என்றும் அவர் கூறினார்

சாங்கி விமானப் போக்குவரத்தின் மீட்பு

சாங்கி விமான நிலைய பயணிகளின் எண்ணிக்கை கோவிட் பரவலுக்கு முன்னிருந்த விகிதத்தில் 40% இந்த ஏப்ரலில் வந்துள்ளதுஇந்த ஆண்டின் இறுதிக்குள் இது 50%ஐ தொட வேண்டும் என்பது சிங்கப்பூர் அரசின் இலக்காகும்

உலக விமான போக்குவரத்தானது 2023க்குள் கோவிட் பரவலின் முந்தைய நிலைக்கு மீண்டு வரும் என்றும் இது எதிர்பார்த்ததை விட 1 வருடம் முன்னதாகவே வரும் என்றும் பன்னாட்டு விமான போக்குவரத்து அதிகாரி, lata பொது இயக்குனர் வில்லி வால்ஷ் தெரிவித்துள்ளார்

முனையம்5ன் நிலப்பரப்பு 667 கால்பந்து மைதானங்களுக்கு இணையானது என்றும் 5கோடி பயணிகளை கையாளும் விதத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

சாங்கி விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனானது 14 கோடி பயணிகளை கையாளும் விதமாக அதிகரிக்கப்படும் என்றும், இது முனையம் 2ன் மேம்பாட்டு பணிகளை கருத்தில் கொண்டும் நடைபெறும் என்றும் தெரிபிக்கப்பட்டுள்ளது. முனையம் 2ன் மேம்பாட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு 2022ல் இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது