சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2, சொன்னதற்கு முன்னதாகவே இன்று புதன்கிழமை மீண்டும் முழுமையாக திறக்கப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட முனையத்தில், நான்கு மாடிகள் கொண்ட உயரமான மல்டிமீடியா டிஜிட்டல் நீர்வீழ்ச்சி காட்சி இடம்பெற்றுள்ளன.
மெரினா பே சாண்ட்ஸின் நுழைவாயிலில் மலம் கழித்த நபர் – யார் அவர்?
மேலும், நிலப்பரப்பு தோட்டம் ஆகியவை பயணிகளின் கண்களுக்கு இன்ப விருந்தாய் அமையும் என கூறப்பட்டுள்ளது.
புறப்பாடு கூடத்தின் மையப் பகுதியில் “தி வொண்டர்ஃபால்” எனப்படும் அந்த டிஜிட்டல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

அது 14 மீ உயரமும் 17 மீ அகலமும் கொண்டது என்று சாங்கி விமான நிலைய குழு (CAG) தெரிவித்துள்ளது.
அங்கு, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை நான்கு நிமிட இசை காட்சி அதன் 892 சதுர திரை முழுவதும் திரையிடப்படும்.
கனேடிய பியானோ கலைஞர் ஜீன்-மைக்கேல் பிளேஸ் அந்த இசையை இசையமைத்துள்ளார் என்று CAG தெரிவித்துள்ளது.

தோட்டத்தில், பறவைகள், பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களின் 100 க்கும் மேற்பட்ட அழைப்பு ஒலிகளையும் நாம் கேட்டு மகிழலாம்.
மேலும், வெளிப்படையாக தெரியும் மேடையில் (transparent platform) மீன் குளமும் இந்த தோட்டத்தில் உள்ளது.
புதிய முனையத்தின் குடிநுழைவு செயல்முறையும் மேம்படுத்துபட்டுள்ளது.
மேலும், அங்கு பொது இடம் மற்றும் விமான போக்குவரத்து பகுதிகளில் ஏராளமான சில்லறை மற்றும் உணவு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பல அம்சங்கள் அங்கு நிறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான பெண் – பல இளம் ஆடவர்களை காதல் வலையில் விழவைத்து பணம் பறிப்பு