பயணிகளுக்கு இன்பச் செய்தி..! சாங்கி விமான நிலைய முனையம் 2 மீண்டும் திறப்பு

automated-immigration-lanes for foreigners pr
Joshua Lee

சாங்கி விமான நிலைய முனையம் 2ல் இன்று பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், இன்று முதல் சாங்கி விமான நிலையத்தின் 2 ஆம் முனையம் செயல்பட தொடங்கியுள்ளது.

நீலம், வெள்ளை மற்றும் தங்க நிற பலூன் அலங்கரிப்பு வளைவு மூலம் காலை 5 மணிக்கு பயணிகளுக்கும் சிறப்பான வரவேற்பு இருந்தது.

அதிக குழந்தைகள் வேண்டும் என ஆசை… ஆனால் செலவு, மன அழுத்தம் அதிகம் என பின்வாங்கும் சிங்கப்பூரர்கள் – ஆய்வு

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்து இருந்ததால், 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் T2 மற்றும் T4 செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

அதனை அடுத்து அனைத்து நாடுகளும் பரந்த அளவில் எல்லைகளை திறந்து வருவதால் தற்போது நான்கு முனையங்களும் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளன.

மேலும், 5 ஆம் முனைய கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலையில் முதல் விமானமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் திறக்கப்பட்டுள்ள இரண்டாம் முனையத்தில் இருந்து புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்கு 28 மில்லியன் பயணிகள் வரை வருவதற்கு ஏற்ற முனையமாக 2ஆம் முனையம் இருப்பது அதன் சிறப்பு ஆகும்.

மூவரை கொடூரமாக தாக்கிய இருவர் – காப்பிக்கடையில் உதிரம் சொட்ட சொட்ட நடந்த சண்டை