மீண்டும் செயல்படுமா சாங்கி விமான நிலையத்தின் முனையம் 4 – எப்போது என்று அறிவித்த அமைச்சர் எஸ் ஈஸ்வரன்

(Photo: ET)

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் உள்ள முனையம் 4 எதிர்வரும் செப்டம்பரில் மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முனையம் புதுப்பிக்கப்பட்ட முனையம் 2-ன் தெற்கு வளாகமும் பயணிகளின் புறப்பாட்டு பகுதியாக செயல்படத் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்த ஆண்டின் குளிர்காலக் பருவத்தில் விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையை முழுமையாக மீட்டெடுக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக நேற்று சாங்கி விமான நிலையத்தில் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அறிவித்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் covid-19 வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பு பதிவான பயணிகளின் எண்ணிக்கையில் 48 சதவீதத்தை அடைய முடிந்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் 50 சதவீதத்தை அடைய வேண்டும் என்ற இலங்கை சிங்கப்பூர் நிர்ணயித்துள்ளது.

பல்வேறு விமான நிறுவனங்கள், விமானப் பயணங்களை மீண்டும் தொடங்க விடுமாறும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க விடுமாறும் கோரிக்கைகள் வைத்துள்ளன. இதனால் சிங்கப்பூரின் விமான போக்குவரத்து சேவைகளை அதிகரிக்க இது ஏதுவாக இருக்கும் என்று சாங்கி விமான நிலையத்தில் முன் நேற்று தெரிவித்தது.

அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ள விடுமுறைக் காலத்தின்போது வெளிநாட்டு பயணங்கள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விமான போக்குவரத்து துறை ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விமான நிறுவனங்கள், விமான நிலையத்தின் பங்குதாரர்கள் குத்தகைதாரர்களாக அடையாளங்காணப்பட்டவர்கள் போன்ற தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருவதாகவும் குழுமம் தெரிவித்தது.