தென் கொரியாவின் Jeju தீவு போல் அழகாக காட்சியளிக்கும் புதிதாக திறக்கப்பட்ட “சாங்கி பே பார்க் கனெக்டர்”

Changi Bay PCN
Tiffany Tan from SG PCN Cyclist/Facebook

சிங்கப்பூரில், சாங்கி பே பார்க் கனெக்டர் (PCN) கடந்த ஜனவரி 22 அன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

சாங்கி பே PCN, தென் கொரியாவின் Jeju தீவு போல் காட்சியளிப்பதாக ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன.

காபி ஷாப்பில் வெளிநாட்டு ஊழியரின் பையை நைசாக தூக்கி சென்ற நபர் (CCTV வீடியோ) – வலைவீசி தேடிவரும் போலீஸ்

ஏனெனில், இது கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளதால், சிங்கப்பூர் புகழ்பெற்ற கான்கிரீட் காடுகளை நீங்கள் குறைவாகவே பார்க்க முடிகிறது.

மேலும், இதில் சூரிய உதயம், கடல் காற்று மற்றும் அழகுபடுத்தப்பட்ட பசுமை ஆகியவை ஒன்றிணைந்தால், இது புகழ்பெற்ற Jeju தீவு போல் தெரிகிறது.

Tiffany Tan from SG PCN Cyclist/Facebook

சாங்கி பே பாயிண்டில் உள்ள சாங்கி கோஸ்ட் சாலை மற்றும் Tanah Merah Coast சாலையை இணைக்கும் இரண்டு சைக்கிள் பாலங்களில் இதுவும் ஒன்று. இந்த பாலங்கள் சுமார் 80மீ நீளம் கொண்டவை.

தண்ணீர் மேலே அமைந்துள்ள இந்த பாலங்கள் மிகவும் அழகான மற்றும் அமைதியான சூழலை நமக்கு பிரதிபலிக்கின்றன.

Tiffany Tan from SG PCN Cyclist/Facebook
Tiffany Tan from SG PCN Cyclist/Facebook

சிங்கப்பூர் அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து: வெளிநாட்டு பணிப்பெண் உயிரிழந்த சோகம்!