சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கிய ‘ஜெட்ஸ்டார் ஏசியா’ விமான சேவைகள்!

Pic: File/Today

மார்ச் 22- ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் (Changi International Airport) நான்காம் முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது ஆஸ்திரேலியாவின் ‘ஜெட்ஸ்டார் ஏசியா’ விமானச் சேவைகள்.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர்… விபரீத முடிவு எடுத்த மனைவி – நிர்கதியாய் நிற்கும் பிள்ளைகள்

ஜெட்ஸ்டார் ஏசியாவின் (Jetstar Asia) முதல் விமானம், 3K766 மணிலாவில் இருந்து மார்ச் 22- ஆம் தேதி அன்று அதிகாலை 12:40 மணிக்கு சிங்கப்பூர் வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, அதே நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு 3K761 விமானம் மணிலாவிற்கு காலை 06.15 மணிக்கு புறப்பட்டது. அதேபோல், ஜெட்ஸ்டார் ஏர்வேஸின் (Jetstar Airways) முதல் விமானம் (JQ8) நான்காம் முனையத்திலிருந்து இன்று இரவு 10.00 மணிக்கு மெல்போர்னுக்கு புறப்பட்டு செல்லும்.

ஜெட்ஸ்டார் குழுமத்தின் (Jetstar Group) 25 பயணிகள் விமானங்கள் விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் இருந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்கி பிளாசாவில் சண்டை- மூன்று பேரை கைது செய்தது காவல்துறை!

இதற்கு முன் ஜெட்ஸ்டார் விமானங்கள், விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்தில் இருந்து சேவைகளை வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.