சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் நான்காவது முனையம் செப்டம்பரில் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு!

Changi Airport Facebook

சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் நான்காவது முனையம் வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்படும் என்று விமான நிலைய குழுமம் அறிவித்துள்ளது.

கரடிக்குட்டி, முயல்குட்டி என கொஞ்சும் அழகிய கேக்குகள் – Clarke Quayவில் உள்ள பிரசித்தி பெற்ற பேக்கரி !

கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் நான்காவது முனையம் கடந்த 2020- ஆம் ஆண்டு மே மாதம், நான்காவது முனையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி, மூடப்பட்டது. இந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதாலும், கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், உலக நாடுகள் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. இதன் காரணமாக, சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.

குறிப்பாக, சிங்கப்பூர் அரசு வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதால், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கான சர்வதேச விமான சேவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், ஏர் ஏசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள், சர்வதேச விமான சேவைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாக உயர்த்தி வருகின்றனர். இதனால் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 100 பேர் கைது

இந்த நிலையில், சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் நான்காவது முனையம் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். இது குறித்து நான்காவது முனையத்தில் விமான நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்பின்னர், 16 விமான நிறுவனங்களின் சேவைகள் படிப்படியாக நான்காவது முனையத்துக்கு மாற்றப்படும். அதன்படி, கொரியன் ஏர் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதி முதல் நான்காவது முனையத்தில் செயல்படும். ஏர் ஏசியா குழுமத்திற்கு சொந்தமான விமானங்கள் வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி அன்று நான்காவது முனையத்துக்கு இடம் பெயரும் என சாங்கி விமான நிலையக் குழுமம் (Changi Airport Group) தெரிவித்துள்ளது.

நான்காவது முனையம் மீண்டும் திறக்கப்படுவதால், விமான நிறுவனங்கள் விமான சேவைகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.