சாங்கி விமான நிலைய டாக்சி சேவைகளின் கட்டண உயர்வு இன்னும் இத்தனை நாட்கள் நீட்டிப்பா ?

changi airport taxi

சாங்கி விமான நிலையத்தில் டாக்ஸிக்காக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் 2022இன் இறுதி வரை நீடிக்கும். சாங்கி விமான நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கான தற்காலிக கட்டண உயர்வாக (மே 19 முதல் ) இருந்த S$3 கூடுதல் கட்டணம் 2022இன் இறுதி வரை நீட்டிக்கப்படும். இந்த உயர்வு முதலில் ஜூன் 30 வரை நீடிக்கும் என்று விமான நிலையம் அப்போது கூறியிருந்தது.

 

தற்போது மாலை 5 மணி முதல் இரவு 11:59 மணி வரையிலான டாக்ஸி பயணங்களுக்கு கூடுதல் கட்டணம் S$8 உம், மற்ற எல்லா நேரங்களுக்கும் S$6 உம் ஆக உள்ளது.

உயர்வுக்கு முன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் S$5 உம் (மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை ). மற்ற எல்லா நேரங்களிலும் S$3 உம் ஆக இருந்தது

ComfortDelGro Taxi, ஸ்ட்ரைட்ஸ் டாக்ஸி, பிரைம் டாக்ஸி மற்றும் பிரீமியர் டாக்ஸிகள் தங்கள்  நீட்டிப்பை அறிவித்தன.

 

பயணிகளுக்கு டாக்சிகளின் சிறந்த சேவையை உறுதிசெய்யவே அதிகரிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் அமல்படுத்தப்பட்டது என்றும் விமான நிலையம் அறிவித்துள்ளது.

 

நிலப் போக்குவரத்து ஆணையத்தின்படி, டாக்சி நிறுவனங்கள் சிங்கப்பூரில் டாக்ஸி கட்டணத்தை தானாகவும் தனிப்பட்ட முறையிலும் தீர்மானிக்கின்றன. குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னர் கட்டண மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும்  கட்டண மாற்றங்களை பொது போக்குவரத்து கவுன்சிலில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.