சிங்கப்பூர் தேசிய தேசிய தினத்தை முன்னிட்டு மலிவான கட்டணத்தில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்!

Cheapest getaways for Singapore National Day weekend

சிங்கப்பூர் தேசிய தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விடுமுறை நாட்களை கொண்டாட குறைவான செலவில், நிறைவான சந்தோசம் அடைய நீங்கள் விரும்பும் பகுதிகளுக்கு பயணிக்கலாம்.

தேசிய தினம் மற்றும் ஹரி ராயா ஹஜி முறையே ஆகஸ்டு 9 வெள்ளி மற்றும் ஆகஸ்டு 11 ஞாயிறு ஆகிய தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் சிங்கப்பூரர்கள் சிலர் சிங்கப்பூரில் தங்கி தனது விடுமுறையை பட்டாசுகளுடன் சிறப்பாக கொண்டாட திட்டம் தீட்டியிருப்பார்கள். பலர் தங்கள் விடுமுறை நாட்களை வெளியில் சென்று கொண்டாட திட்டம் போட்டு இருக்கலாம். எதிர்பாராதவிதமாக இந்த விசேஷ தினங்களில் நாம் பயணிக்க விரும்பும் புகழ்மிக்க பகுதிகளுக்கு விமான கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பது நிதர்சனம்.

குறைவான செலவில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எங்கு செல்ல வேண்டும்?? Kayak டேட்டாவை பயன்படுத்தி 5 மலிவான இடங்களை வடிகட்டி உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். அவை உங்கள் பார்வைக்கு:

1.ஜகார்த்தா (JAKARTA), இந்தோனேசியா.

மிக மிக குறைந்த Round-trip விமான கட்டணம், நிறைந்த மகிழ்ச்சி. வெறும் $221 வெள்ளி மட்டுமே விமான கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

2.கோலாலம்பூர் (KUALA LUMPUR), மலேசியா.

சிங்கப்பூரர்கள் சுற்றிப் பார்ப்பதற்கு மிக சிறந்த இடமாக கோலாலம்பூர் கண்டிப்பாக இருக்கும். இதற்கான Round-trip விமான சராசரி செலவு $272 வெள்ளி மட்டுமே.

3.குச்சீங் (KUCHING), மலேசியா.

மலிவான விமான கட்டணங்களில் பயணிக்க மிக சிறந்த இடம் குச்சீங், இதற்கான Round-trip விமான சராசரி செலவு $319 வெள்ளி மட்டுமே ஆகிறது.

4.பாங்காக் (BANGKOK), தாய்லாந்து.

பாங்காக் Round-trip விமான சராசரி செலவு $400 ஒரு முறை சென்று பாருங்கள் உங்கள் விருப்பமான கிராண்ட் பேலேஸ் மற்றும் Wat Pho ஆகிய இடங்களை குறைந்த செலவில் என்ஜாய் பண்ணலாம்.

5.மகாசர் (MAKASSAR). இந்தோனேசியா.

உங்களின் விருப்பம் மகாசர் -ஆக கூட இருக்கலாம்.! இதற்கான Round-trip விமான கட்டணம் $453 வெள்ளி மட்டுமே.

Credit : Asia One